மேலும் செய்திகள்
மேல்மலையனுார் ஒன்றிய கூட்டம்
1 hour(s) ago
பெண் தீக்குளிக்க முயற்சி
1 hour(s) ago
லாட்டரி சீட்டு விற்றவர் கைது
1 hour(s) ago
பயிற்சி முகாம்
1 hour(s) ago
விழுப்புரம் மாவட்டத்தில், பா.ஜ.,விற்கு 2 சீட் கேட்டு, அ.தி.மு.க., தலைமையிடம் விருப்பம் தெரிவித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில், திருக்கோவிலுார் தொகுதி பா.ஜ., விற்கு ஒதுக்கப்பட்டது. அந்த தேர்தலில் தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் பொன்முடியை எதிர்த்து, அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ., வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ., கலிவரதன் போட்டியிட்டார். இந்த தேர்தலில் பொன்முடி 59 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இத்தொகுதியில், கடந்த 2 தேர்தல்களிலும் தி.மு.க., வெற்றி பெற்றிரு ந்தாலும், தி.மு.க., உட்கட்சி பிரச்னை மற்றும் ஆட்சி மீது பொதுமக்களின் அதிருப்தி காரணமாக, இந்த முறை வெற்றி பெற வாய்ப்புள்ளதாக அ.தி.மு.க., தரப்பில் நம்பிக்கையுடன் உள்ளனர். கடந்த 2016ம் ஆண்டு தேர்தலின் போது தனித்து போட்டியிட்ட பா.ம.க., 19 ஆயிரம் ஓட்டுகளும், த.மா.கா., 15 ஆயிரம் ஓட்டுகளும் பெற்றன. இ தேபோல் 2021ம் ஆண்டு தேர்தலில் தே.மு.தி.க., 14 ஆயிரம் ஓட்டுகள் பெற்றது. வரும் 2026 தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் த.மா.கா., உள்ள நிலையில் பா.ம.க., - தே.மு.தி.க., கட்சிகளும் இணைந்தால், நிச்சயம் வெற்றி பெறலாம் என எதிர்பார்ப்பு உள்ளது. இதனால், திருக்கோவிலுார் தொகுதியில், பா.ஜ., சார்பில் போட்டியிட முன்னாள் எம்.எல்.ஏ.,க்களான மாநில துணைத்தலைவர் சம்பத், முன்னாள் மாவட்ட தலைவர் கலிவரதன் ஆகிய இருவரும் முயற்சித்து வருகின்றனர். இதேபோல், செஞ்சி தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட மாநில நிர்வாகி முரளி ரகுராமன் முயற்சித்து வருகிறார்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago