உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போதையில் விதிமீறல்: 206 பேர் மீது வழக்கு

போதையில் விதிமீறல்: 206 பேர் மீது வழக்கு

விழுப்புரம்: மாவட்டத்தில், தீபாவளியன்று விதிமீறி வாகனங்களை ஓட்டிய 206 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். விழுப்புரம் மாவட்டத்தில், தீபாவளியையொட்டி, போலீசார் கடந்த 19ம் தேதி இரவு முதல் 20ம் தேதி இரவு வரை, முக்கிய சாலை சந்திப்புகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், ஓவர் லோடு ஏற்றிச்செல்லுதல், ஹெல்மெட் அணியாமல் செல்வது உள்ளிட்ட விதிகளை மீறியதாக 206 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். இதில், மதுபோதையில் வாகனங்களை ஓட்டிய 32 பேரின் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த தீபாவளியன்று, பட்டாசு வெடித்தல் விதிமீறல் வழக்கில் ஒருவரும் சிக்கவில்லை என்பது குறிப்பித்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ