உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நான் முதல்வன் திட்டத்தில் 2,502 மாணவர்களுக்கு பணி

நான் முதல்வன் திட்டத்தில் 2,502 மாணவர்களுக்கு பணி

விழுப்புரம், : விழுப்புரம் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்ட வேலை வாய்ப்பு முகாமில் 2,502 மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்புக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லுாரியில் நடந்த இந்த முகாமில் கல்லுாரி முதல்வர் சிவக்குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் அண்ணாமலை பல்கலை., வளர்ச்சிக்குழு முதல்வர் லோகநாயகி, நான் முதல்வன் திட்ட அலுவலர் செந்தில்முருகன், ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதேவி வேலை வாய்ப்பு அலுவலர் ஸ்ரீதர் பங்கேற்றனர்.தமிழக அரசு திறன் மேம்பாட்டு மைய துணை இயக்குனர் நடராஜன், அலுவலர் அருண்குமார், வேலை வாய்ப்புத்துறை இணை இயக்குனர் பெரியசாமி முன்னிலை வகித்தனர்.முகாமில், பல்வேறு அரசு கல்லுாரிகளைச் சேர்ந்த 2,502 மாணவ, மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு ஆணை வழங்கப்பட்டது.நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதேவி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை