உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சூரத் ரயில் நிலையத்தில் இருந்து 2,630 மெட்ரிக் டன் யூரியா வருகை

சூரத் ரயில் நிலையத்தில் இருந்து 2,630 மெட்ரிக் டன் யூரியா வருகை

விழுப்புரம்: சூரத் ரயில் நிலையத் தில் இருந்து முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு 2,630 மெட்ரிக் டன் யூரியா மூட்டைகள் வந்தன. விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது குறுவை நெல் சாகுபடிக்கு தேவையான யூரியா 2,329 மெ.டன், டி.ஏ.பி.. 2539 மெ.டன், பொட்டாஷ் 930 மெ.டன், காம்ப்ளெக்ஸ் 6258 மெ.டன், சூப்பர் பாஸ்பேட் 1756 மெ.டன், மாவட்டத்தி லுள்ள அனைத்து வட்டாரங் களிலும் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் சில்லறை விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிரிப்கோ நிறுவனத்தில் இருந்து 2630 மெ.டன் யூரியா மூட்டைகள் சூரத் ரயில் நிலையத்தில் இருந்து முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு சரக்கு ரயிலில் வந்தன. இதில், விழுப்புரம் மாவட்டத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு 650 மெ.டன் மற்றும் தனியார் உரக்கடைகளுக்கு 200 மெ.டன், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு 600 மெ.டன், கடலுார் மாவட்டத்திற்கு 750 மெ.டன் உர மூட்டைகள் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன. இப்பணியை தரக்கட்டுப்பாடு உதவி இயக்குநர் விஜயகுமார் ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி