உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆரோவில் மாத்ரி மந்திர் மையத்தை 27,500 சுற்றுலா பயணிகள் பார்வை

ஆரோவில் மாத்ரி மந்திர் மையத்தை 27,500 சுற்றுலா பயணிகள் பார்வை

வானுார்,: ஆரோவில் பகுதியில் அமைந்துள்ள மாத்ரி மந்திர் மையத்தை, 4 நாட்கள் தொடர் விடுமுறையால் 27 ஆயிரத்து 500 சுற்றுலா பயணிகள் பார்வையிட்டுள்ளனர்.விழுப்புரம் மாவட்டம், ஆரோவில்லில் மாத்ரி மந்திர் தியான மையத்தை பார்வையிட தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த 31ம் தேதி தீபாவளியை தொடர்ந்து நேற்று வரை தொடர் விடுமுறை வந்தது.இந்த விடுமுறையை பயன்படுத்தி, ஏராளமான சுற்றுலா பயணிகள், புதுச்சேரிக்கு வருகை தந்தனர். இங்குள்ள மாத்ரி மந்திரின் வெளித்தோற்றத்தை பார்வையிடுவதற்காக மட்டும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.தீபாவளி தினமான 31ம் தேதி 2,500 பேர், 1ம் தேதி 7,000 பேர், 2ம் தேதி 10 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்.நேற்று மாலை 4;00 மணி நிலவரப்படி, 8,000 பேர் பார்வையிட்டுள்ளனர். கடந்த நான்கு நாட்களில் 27 ஆயிரத்து 500 சுற்றுலா பயணிகள் வந்து சென்றதாக, ஆரோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி