உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மருத்துவமனையில் 3 சவரன் அபேஸ்

மருத்துவமனையில் 3 சவரன் அபேஸ்

விக்கிரவாண்டி; விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், 3 சவரன் 'அபேஸ்' செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். திருவெண்ணெய்நல்லுார் அருகே, காரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து, 48; விவசாயி. இவரது மாமியார் இந்திராணி, 72; உடல் நலக்குறைவு காரணமாக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 2ம் தேதி அவருக்கு ஸ்கேன் எடுக்க கூறியதால் மாரிமுத்து இந்திராணியின் தாலி, செயின், கம்மல் அடங்கிய, 3 சவரன் நகைகளை அவிழ்த்து, பையில் வைத்து அதை ஸ்கேன் அறை எதிரில் அமர்ந்திருந்த நபர் ஒருவரிடம் கொடுத்து விட்டு உள்ளே சென்றார். திரும்பி வந்து பார்த்த போது அந்த நபரை காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !