மேலும் செய்திகள்
கோவிலில் திருட்டு
12-Jul-2025
திருவெண்ணெய்நல்லூர்:மூதாட்டியிடம் செயின் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஆனத்தூர் கிராமத்தை சேர்ந்த கந்தன் மனைவி கலையரசி, 65; கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை அதே கிராமத்தில் நடந்த தீமிதி திருவிழாவிற்கு சென்றார். பின்னர் திருவிழா முடிந்து வீட்டிற்கு சென்ற போது கழுத்தில் அணிந்திருந்த, 3 சவரன் செயின் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து கலையரசி நேற்று மாலை திருவெண்ணெய்நல்லுார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
12-Jul-2025