உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாணவர் மீது சரமாரி தாக்குதல் வானுார் அருகே 4 பேர் கைது

மாணவர் மீது சரமாரி தாக்குதல் வானுார் அருகே 4 பேர் கைது

வானுார் : வானுார் அருகே, நடு ரோட்டில் அரசு கல்லுாரி மாணவரை, பொது மக்கள் மத்தியில் சரமாரியாக தாக்கிய நால்வரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த பாப்பாஞ்சாவடி புது காலனியை சேர்ந்தவர் நாகேந்திரன் மகன் சக்திவேல், 20; இவர் திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.சக்திவேல் நேற்று கல்லுாரி உள்ளே செல்லும் சாலையில் பைக்கில் சென்றுள்ளார். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த நபர்கள், சக்திவேல் பைக்கில் மோதியுள்ளனர். இதனால் இரு தரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.பின்னர் சக்திவேல், தன்னுடன் பயிலும் மாணவர்களுடன், மயிலம் ரோட்டிற்கு வந்தார். அப்போது அங்கு வந்த அந்த நபர்கள், பொது மக்கள் மத்தியில் சக்திவேலை, பயங்கரமாக தாக்கியுள்ளனர். மோதலை தடுக்க வந்த பேராசிரியருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.தாக்குதலில் படுகாயமடைந்த சக்திவேல், ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, ஆரோவில் போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், திருச்சிற்றம்பலம் கூட்ரோடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுரேந்தர், 21; பாபு,23; வீரன், 23; புதுச்சேரி சிவராந்தகம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த சாரதி, 22; ஆகிய நான்கு பேர் சேர்ந்து தாக்கியது தெரிய வந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து, பாபு உள்ளிட்ட நால்வரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி