உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் நகை திருட்டு..

வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் நகை திருட்டு..

வானுார்: கிளியனுார் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் நகை மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கிளியனுார் அடுத்த எறையானுார் பாண்டியன் நகரை சேர்ந்தவர் சக்திவேல் மனைவி செல்வி, 50; இவர் கடந்த 25ம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு, உறவினர் வீட்டிற்கு சென்றார். 27 ம் தேதி வீட்டிற்கு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, அறைக்குள் இருந்த பீரோவை உடைத்து, அதில் இருந்து 5 சவரன் நகைளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது. தகவலறிந்த கிளியனுார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து செல்வி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி