மேலும் செய்திகள்
இன்று பள்ளிகள் திறக்க ஏற்பாடு
09-Dec-2024
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், வெள்ளத்தால் சேதமடைந்ததாக விடுமுறை அளிக்கப்பட்ட 6 அரசு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டத்தில், பெஞ்சல் புயல், கனமழையால் கடும் சேதம் ஏற்பட்டது. இதனால், கடந்த 29ம் தேதி முதல் 9ம் தேதி வரை அனைத்து பள்ளி, கல்லுாரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.தொடர் விடுமுறைக்குப்பின், நேற்று முன்தினம் பள்ளி, கல்லுாரிகள் வழக்கம் போல் திறக்கப்பட்டு இயங்கின. இருப்பினும், கடும் வெள்ள சேதத்தால் பாதிக்கப்பட்ட திருவெண்ணெய்நல்லுார், மரக்காணம் பகுதிகளில் 7 அரசு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை நீட்டிக்கப்பட்டது.இந்நிலையில், சேதமடைந்த பள்ளிகளில் சீரமைப்பு பணிகள் முடிந்து, திருவெண்ணைநல்லுார் ஒன்றியம், சிறுமதுரை அரசு தொடக்கப் பள்ளி, மரக்காணம் ஒன்றியம் ஓமந்துார் தொடக்கப் பள்ளி, நாரவாக்கம் தொடக்கப் பள்ளி, கந்தாடு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளி, வண்டிப்பாளையம் தொடக்கப் பள்ளி, கீழ்சித்தாமூர் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்க பள்ளி ஆகியவை நேற்று திறக்கப்பட்டன.திருவெண்ணைநல்லுார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மட்டும், சீர்படுத்தும் பணி நடக்கிறது, அதனால் அந்த பள்ளி மட்டும் இன்னும் திறக்கப்படவில்லை.
09-Dec-2024