உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / 3 இடங்களில் மணல் திருட்டு 7 பேர் கைது: லாரிகள் பறிமுதல்

3 இடங்களில் மணல் திருட்டு 7 பேர் கைது: லாரிகள் பறிமுதல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், ஒரே இரவில் 3 இடங்களில் மணல் திருட்டில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்து, லாரிகளை பறிமுதல் செய்தனர்.திண்டிவனம் அடுத்த கடவம்பாக்கம் ஆற்றிலிருந்து, அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 3 டிப்பர் லாரிகளை, ஒலக்கூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு பிடித்தனர். ஆலங்குப்பம் சிவா, 32; அடசல் சரவணன், 40; மரக்காணம் மாதவன், 31; ஆடவள்ளிகூத்தான் ஆறுமுகம் மகன் செல்வராம், 26; ஆகியோரை போலீசார் கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.இதேபோன்று, கண்டமங்கலம் போலீசார் பெரியபாபுசமுத்திரம் ஆற்றில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 2 லாரிகளை, பிடித்தனர். போலீசாரை கண்டதும், லாரியை விட்டுவிட்டு டிரைவர்கள் தப்பியோடிவிட்டனர். வெள்ளிமேடுபேட்டை போலீசார் அப்பகுதியில் அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றி வந்த கல்பாக்கம் சக்கரவர்த்தி, 56; வைரம்பேட்டை ஐயப்பன், 30; கீழ்மாவிளங்கை சுந்தர்ராமன், 47; ஆகியோரை கைது செய்தனர். இரண்டு டிப்பர் லாரி, ஒரு பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.மாவட்டம் முழுவதும், ஒரே நாள் இரவில் மணல் திருட்டில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு, 7 லாரிகள், ஒரு பொக்லைன் இயந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை