மேலும் செய்திகள்
மின் கசிவால் கூரை வீடு எரிந்து நாசம்
15-Sep-2024
வானுார்: வானுார் அருகே தனியார் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான அட்டை பெட்டிகள் எரிந்து நாசமானது.புதுச்சேரி, லாஸ்பேட்டையைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 60; இவர், பூத்துறை சாலையில், பட்டானுாரில் அட்டை தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் மாலை 5:30 மணிக்கு, கம்பெனிக்குள் இருந்த அட்டை பெட்டிகள் திடீரென தீ பிடித்து எரிந்தது.தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள், விரைந்து வந்து, ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான அட்டை பெட்டிகள் எரிந்து நாசமாயின.ஆரோவில் போலீசார் நடத்திய விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்தது தெரிய வந்தது.
15-Sep-2024