மேலும் செய்திகள்
கிரைம் செய்திகள்...
11-Nov-2024
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரத்தில் மாடுகளைத் திருடி சந்தையில் விற்க முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.கண்டாச்சிபுரம், மடவிளாகம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 40; விவசாயி. இவர் அய்யன்பாளையம் பகுதியில் உள்ள தனது நிலத்தில் மாடுகளை வளர்த்து வருகிறார்.கடந்த 10ம் தேதி காலை நிலத்திற்குச் சென்று பார்த்த போது 2 மாடுகளைக் காணவில்லை. இந்நிலையில் அந்த 2 மாடுகளை மடப்பட்டு சந்தையில் வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் மகன் ஏழுமலை, 27; என்பவர் விற்க முயன்றது தெரியவந்தது.உடன், ஏழுமலையை பிடித்து கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் தெரிவித்தார். அதன் பேரில், ஏழுமலை மீது போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து மாடுகளை பறிமுதல் செய்தனர்.
11-Nov-2024