உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திண்டிவனத்தில் பரிதவித்த குழந்தை; தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்ப்பு

திண்டிவனத்தில் பரிதவித்த குழந்தை; தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்ப்பு

திண்டிவனம் : திண்டிவனத்தில் ஆதரவற்று விடப்பட்ட பெண் குழந்தையை போலீசார் மீட்டு, தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்த்தனர்.திண்டிவனம் காமராஜர் சிலை அருகே மாவு மில் படிக்கட்டில் நேற்று காலை 10:00 மணியளவில், ஒன்றரை வயதுடைய பெண் குழந்தை அழுது கொண்டிருந்தது. அதன் அருகில் அந்த குழந்தையின் டிரஸ்கள் இருந்தது. அவ்வழியே சென்றவர்கள், குழந்தையை ஆசுவாசப்படுத்த முயன்றனர். ஆனால், குழந்தை அழுகையை நிறுத்தவில்லை. வெகுநேரமாகியும், குழந்தையை தேடி யாரும் வராததால் சந்தேகமடைந்த பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.அனைத்து மகளிர் போலீசார், குழந்தையை மீட்டு ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து குழந்தையின் பெற்றோர் யார், குழந்தையை விட்டு சென்றது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.அதில், எவ்வித தகவலும் கிடைக்காததை தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் கிருபாலட்சுமி, அதேகொம் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி ஆகியோர், குழந்தையை விழுப்புரத்தில் உள்ள தொட்டில் குழந்தை திட்ட மேற்பார்வையாளர் புவனேஸ்வரியிடம் நேற்று மாலை ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

நிக்கோல்தாம்சன்
ஜன 21, 2025 06:47

வேதனையான தருணம் இந்த செய்தியை படிக்கும் நேரம்


Sivagiri
ஜன 20, 2025 23:48

அப்பன்காரன் டாஸ்மாக்கில் விழுந்து கிடக்கிறானா ? நான் பல தடவை பாத்திருக்கேன் , டீக்கடையில் பிள்ளைக்கு பொறை வாங்கி கையில் கொடுத்து உக்கார வச்சிட்டு அப்பன் டாஸ்மாக்கில் விழுந்து கிடப்பான் . .


Barakat Ali
ஜன 20, 2025 15:47

கள்ளக்காதலால் பிறந்த குழந்தையாக இருக்கலாம் ... அல்லது அதிக பெண்குழந்தைகள் இருப்பதால் லேட்டஸ்ட் குழந்தையை விட்டுவிட்டார்கள் ....


S.Natarajan
ஜன 20, 2025 13:08

இவர்களை பொது இடத்தில் மரண தண்டனை வழங்க வேண்டும் .


xyzabc
ஜன 20, 2025 11:56

அந்த பெற்றோர்கள் மன்னிக்கப்பட கூடாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை