உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குவைத்திலிருந்து திரும்பியவர் ரயிலில் பலி

குவைத்திலிருந்து திரும்பியவர் ரயிலில் பலி

திண்டிவனம்:கடலுார் மாவட்டம், சிதம்பரம், அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் ரமேஷ், 35, குவைத்தில் வேலை செய்து வந்த இவர், நேற்று முன்தினம் விமானம் வாயிலாக சென்னைக்கு வந்தார். அங்கிருந்து திருச்செந்துார் செல்லும், செந்துார் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிதம்பரத்திற்கு புறப்பட்டார்.ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் ரமேஷ், படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்தார். அன்று இரவு 7:00 மணிக்கு, திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் ரயில் நிலையத்தைக் கடந்தபோது, ரமேஷ், தவறி விழுந்து இறந்தார்.செங்கல்பட்டு ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ