மேலும் செய்திகள்
அடுத்தடுத்து பைக் விபத்து மூவர் இறப்பு
24-Sep-2024
விழுப்புரம் : விழுப்புரத்தில் நடந்த சாலை விபத்தில் நண்பருடன் பைக்கில் சென்ற கல்லுாரி மாணவி இறந்தார்.விழுப்புரம் அடுத்த நரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி மகள் கவிநிஷா, 17; விழுப்புரம் அரசு கல்லுாரியில் பி.ஏ., வரலாறு முதலாமாண்டு படித்து வருகிறார். இவர், நேற்று மதியம் 2:00 மணிக்கு, தன்னுடன் படிக்கும் விழுப்புரம் அடுத்த அயனம்பாளையத்தைச் சேர்ந்த நண்பரான சிபிராஜ், 17, என்பவருடன் அதே கல்லுாரியில் படித்து வரும் நண்பர் ஒருவரின் புதிய யமாகா சொகுசு பைக்கை வாங்கிக்கொண்டு, ஓட்டிப்பார்ப்பதற்காக சென்றுள்ளனர்.சிபிராஜ் பைக்கை ஓட்டிச்செல்ல கவிநிஷா உடன் அமர்ந்து சென்றார். கல்லுாரியிலிருந்து கிழக்கு பாண்டி ரோட்டில், மகாராஜபுரம் அருகே பைக்கில் வேகமாக சென்றபோது, அங்கு சாலையில், வேக கட்டுப்பாட்டுக்காக வைத்துள்ள இரும்பு பேரிக்காடு தடுப்பில் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இருவரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியில் கவிநிஷா இறந்தார். காயங்களுடன் சிபிராஜ் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து விழுப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
24-Sep-2024