மேலும் செய்திகள்
முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் நெகிழ்ச்சி
16-May-2025
திண்டிவனம்: திண்டிவனம், ரோஷனை (இந்து), நகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை, இலவச பாட புத்தகம், சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.முதல் வகுப்பில் சேர்க்கை பெற்ற 12 மாணவர்களுக்கு, சால்வையுடன் கிரீடம் அணிவித்து பள்ளி வகுப்பறையில் அமர வைக்கப்பட்டனர். மாணவர்களுக்கு இலவச பாட புத்தகம், சீருடைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, பள்ளி மேலாண்மை குழு தலைவர் மெகராஜ்பேகம் தலைமை தாங்கினார். கவுன்சிலர் தில்ஷாத்பேகம் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் வரவேற்றார். திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலர் அருள், ஒலக்கூர் ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் கிருஷ்ணன் கலந்து கொண்டனர். இடைநிலை ஆசிரியர் அனீஸ்பாத்திமா நன்றி கூறினார்.
16-May-2025