பெருமாள் கோவிலில் ஆடிப்பூரம்
விழுப்புரம்; விழுப்புரம் வைகுண்ட வாசப்பெருமாள் கோவிலில், நாளை மறுதினம் ஆடிப்பூர விழா நடக்கிறது. இந்த விழாவையொட்டி, அன்றைய தினம் காலை 9:00 மணிக்கு சுவாமிக்கு திருமஞ்சனமும், மாலை 6:00 மணிக்கு மேல் 7:00 மணிக்குள், ஸ்ரீ ஆண்டாள் பெருமாள் திருக்கல்யாண உற்சவமும் விமரிசையாக நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர், கோவில் ஆய்வாளர், செயல்அலுவலர், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் விழா குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.