உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தொழிலாளியை ஏமாற்றி ரூ.6.75 லட்சம் அபேஸ்

தொழிலாளியை ஏமாற்றி ரூ.6.75 லட்சம் அபேஸ்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே வைடபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜய்யா மகன் ஜெகதீசன்,36; தனியார் நிறுவன தொழிலாளி. இவரின் மொபைலுக்கு கடந்த 20ம் தேதி மர்ம நபர் ஒருவர் வாட்ஸ் அப் எண் மூலம் தொடர்பு கொண்டு, தான் இருதய நிபுணர் என்றும், அமெரிக்காவில் இருந்து பேசுவதாக தெரிவித்தார். தொடர்ந்து நாள்தோறும் வாட்ஸ் அப் மூலம் 'சாட்' செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 27 ம் தேதி வாட்ஸ் அப் மூலம் ஜெகதீசனை தொடர்பு கொண்டு, தான் இந்தியாவை சுற்றிப்பார்க்க வந்ததாகவும், தற்பேது டில்லி ஏர்போட்டில் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் வெளிநாட்டு கரன்சியை அதிகமாக கொண்டு வந்ததால், கஸ்டம்ஸ் அதிகாரிகள் பிடித்து வைத்துள்ளதாகவும், இந்தியன் கரன்சியாக மாற்ற பணம் கட்டினால் தான் தன்னை விடுவிப்பதாக கூறியுள்ளார். இதை நம்பிய ஜெகதீசன், அவரின் வங்கி கணக்குகளை இணைத்துள்ள மொபைல் பேமண்ட் ஆப்கள் மூலம் மர்ம நபர் கூறிய வங்கி கணக்குகளுக்கு மொத்தம் ரூ. 6.75 லட்சத்தை அனுப்பினார். தொடர்ந்து, மர்ம நபர் ஜெகதீசனை வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு, ஐ.எம்.எப்., சான்றிதழ் வாங்க ரூ.12 லட்சம் பணம் கட்டினால் தான் தன்னை விடுவிப்பதாக கூறி பணத்தை கேட்டுள்ளார். அப்போது தான் ஜெகதீசனுக்கு தான் பணத்தை ஏமாந்த விவரம் தெரிந்தது. இதையடுத்து, அவர் நேற்று விழுப்புரம் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ