தலைமறைவு ஆசாமி 6 ஆண்டுக்கு பின் கைது
கோட்டக்குப்பம், : கோட்டக்குப்பத்தில் நடந்த வழிப்பறி வழக்கில் 6 ஆண்டுகளாக தேடப்பட்ட ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி மூலக்குளம் பெரம்பை ரோடு வாய்க்கால் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர், 35; இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு கோட்டக்குப்பம் பகுதியில் நடந்த வழிபறி வழக்கில் கோட்டக்குப்பம் போலீசார் ராஜசேகரை தேடி வந்தனர். கடந்த 6 ஆண்டுகள் தலைமைவாக இருந்த ராஜசேகருக்கு, வானுார் கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்தது.தனிப்படை போலீசார் தேடிய நிலையில், ராஜசேகர் குடும்பத்தோடு திருப்பூர் அவிநாசி சாலையில் தங்கி கூலி வேலை செய்தது தெரிய வந்தது. கோட்டக்குப்பம் போலீசார் நேற்று ராஜசேகரை கைது செய்து வானுார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.