உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.மு.க., சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு

தி.மு.க., சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு

விழுப்புரம் : விழுப்புரத்தில் தி.மு.க., சார்பில் அனைத்து கட்சியினர் மத நல்லிணக்க உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் காந்தி சிலை முன்பு நடந்த நிகழ்ச்சிக்கு, தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ., தலைமை வகித்து, காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்றனர். எம்.எல்.ஏ., லட்சுமணன், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், காங்கிரஸ் மாவட்ட தலைவர் சீனுவாசகுமார், நகர தலைவர் செல்வராஜ், முஸ்லீம் லீக் கட்சி மாவட்ட செயலர் அமீர் அப்பாஸ், தி.மு.க., நகர செயலாளர் சக்கரை, நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, துணை தலைவர் சித்திக்அலி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன், தகவல் தொழில்நுட்ப அணி அன்பரசு, சிறுபான்மை அணி முகமது அலி உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்து கொண்டு, மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி