மேலும் செய்திகள்
போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
03-Oct-2025
திண்டிவனம்: திண்டிவனத்தில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு பிரசார ஊர்வலம் நடந்தது. திண்டிவனம் தீயணைப்பு நிலையம், நண்பர்கள் அரிமா சங்கமும், ராஜராஜேஸ்வரி பள்ளி இணைந்து நடத்திய ஊர்வலத்திதை தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலர் பாஸ்கரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். நண்பர்கள் லயன்ஸ் சங்க தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பால் பாண்டியன் ரமேஷ் முன்னிலை வகித்தார். நேரு வீதி முதல் காந்தி சிலை வரை நடந்த ஊர்வலத்தில், ராஜராஜேஸ்வரி உயர்நிலைப்பள்ளி, புனித அன்னாள் பள்ளியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். ஊர்வலத்தில், பெரியவர்கள் கண்காணிப்பில் பட்டாசு வெடிக்க வேண்டும். நீண்ட ஊதுபத்தியை உபயோகித்து பக்கவாட்டில் நின்று பட்டாசு வெடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அடங்கிய பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. திண்டிவனம் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் ராஜா, மாரிசெல்வம், நண்பர்கள் லயன்ஸ் சங்க செயலாளர்கள் செந்தில்குமார், பாலவிக்னேஷ், பொருளாளர் வீராசாமி, சுப்ராயன், தினேஷ், செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
03-Oct-2025