உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு

விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு

திண்டிவனம்: திண்டிவனம் சர்வீஸ் லயன்ஸ் சங்கம், லயன்ஸ் சர்வீஸ் டிரஸ்ட், அரசு வேளாண் விற்பனை மற்றும் வணிக துறை, தீயணைப்பு துறை சார்பில், விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. திண்டிவனம் உழவர் சந்தை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, சர்வீஸ் லயன்ஸ் சங்க தலைவர் கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார். லயன்ஸ் சர்வீஸ் டிரஸ்ட் தலைவர் ஆனந்த், வேளாண் உதவி இயக்குனர் சரவணன், உழவர் சந்தை நிர்வாக அலுவலர் கருப்பையா முன்னிலை வகித்தனர். திண்டிவனம் ஆர்யாஸ் ஹோட்டல் நிறுவனர் ராமகிருஷ்ணன், விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கி விபத்தில்லா தீபாவளி கொண்டாட்டத்தை துவக்கி வைத்தார். தீயணைப்பு அலுவலர்கள் மாரி செல்வம், ராஜா தலைமையிலான குழுவினர், விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு ஒத்திகையை செய்து காட்டினர். மாவட்ட தலைவர் தணிகாச்சலம், வட்டார தலைவர் முஸ்தபா, முத்துராஜ்குமார், ஆனந்தகுமார், டாக்டர் பார்த்திபன், கஸ்துாரிரங்கன், குமார், பாரிநாதன், மணி, சத்தீஷ், ரமேஷ், செல்வகுமார், உழவர் சந்தை கவுதமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Palanisamy T
அக் 18, 2025 07:44

1. விபத்தில்லா தீபாவளியென்றால் குடிப்பதை எவ்வளவுக் குறைத்துக் கொள்கின்றோமோ அந்த அளவிற்கு விபத்துக்களை குறைத்துக் கொள்ளலாம். குடும்பத்தை நினைத்துக் கொண்டு குடிக்காமல் வண்டியோட்டுங்கள். சட்டமே சொல்லுது குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது தப்பென்று. எங்கள் ஊரில் குடித்துவிட்டு வண்டி ஓட்டினாள் உடனே தண்டனை, வாகனம் ஓட்டும் உரிமை பறிமுதல், கட்டாயக் கைது சிறைவாசமென்றாகிவிடும். இந்த இரண்டு மூன்று. நாட்களாவது டாஸ்மாக்கை மறந்துவிடுங்கள். 2. காவல் துறையினர் தங்கள் கடமைக்கு வாகனமோட்டிகளிடம் கடுமையாக நடந்துக் கொள்ள வேண்டும். இந்த தீபத் திருநாள் நல்ல திருநாளாக அமைய உங்களின் ஒத்துழைப்பும் மிகமிக அவசியம். நீங்கள் காவல் துரையின் நல்லப் பேரை காப்பாற்றுங்கள்.


முக்கிய வீடியோ