மேலும் செய்திகள்
3 ஆம்னி பஸ்கள் பறிமுதல் தலா ரூ.1 லட்சம் அபராதம்
15-Sep-2025
திண்டிவனம்; திண்டிவனம் அருகே ஆம்னி பஸ் மீது உப்பு லோடு ஏற்றிச்சென்ற சரக்கு வாகனம் மோதிய விபத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை, புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் செல்வம், 55; டிரைவர். இவர், நேற்று துாத்துக்குடியில் இருந்து சரக்கு வாகனத்தில் உப்பு மூட்டை ஏற்றிக்கொண்டு சென்னை சென்றார். இந்நிலையில் திண்டிவனம் அடுத்த நல்லாத்துார் தேசிய நெடுஞ்சாலையில் காலை 6:30 மணியளவில் பழுதான காரை இழுத்து சென்ற வாகனத்தின் டிரைவர் திடீரென பிரேக் போட்டார். அப்போது, அதன் பின்னால் சென்ற ஆம்னி பஸ் டிரைவரும் திடீரென பிரேக் போட, செல்வம் ஓட்டி சென்ற சரக்கு வாகனம் கட்டுப்பாடின்றி, ஆம்னி பஸ் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில், செல்வம், வாகனத்தின் உள்ளே சிக்கிக்கொண்டார். தகவலறிந்த ஒலக்கூர் போலீசார் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு செல்வத்தை, வாகனத்தில் இருந்து மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால், திருச்சி - சென்னை மார்க்கத்தில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஒலக்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
15-Sep-2025