சாலையில் மாடுகள் திரிவதால் தொடரும் விபத்துகள்
வானுார்: ஆரோவில் சாலையில் கால்நடைகள் சுற்றித் திரிவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.புதுச்சேரி - திண்டிவனம் புறவழிச்சாலையில் இருந்து இடையஞ்சாவடி வழியாகவும், கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து பெரிய முதலியார்சாவடி, பொம்மையார்பாளையம் சாலை வழியாகவும் ஆரோவில் பகுதிக்கு ஏரளமன சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வருகின்றனர். இதனால் இந்த சாலை வாகன போக்குவரத்து படுபிசியாக காணப்படும்.குறிப்பாக, இடையஞ்சாவடி முதல் குயிலாப்பாளையம் வரையுள்ள சாலையில், ஆரோவில் பேக்கரி, ஓட்டல்கள் அதிகளவில் அமைந்துள்ளதால், வாகன போக்குவரத்து அதிகளவில் இருக்கும். மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில், பகல் மற்றும் இரவு நேரங்களில், மாடுகள் அதிகளவில் சுற்றி திரிகின்றன.சாலையில் படுத்து கிடக்கும் மாடுகள் மீது, வெளி மாநிலத்தில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் தெரியாமல், மோதி விபத்தில் சிக்குகின்றனர்.இதே போன்று, இந்த சாலையில் விபத்துகள் நடக்காத நாட்களே கிடையாது. இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுற்றுாலா பயணிகள், பொது மக்கள் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.எனவே சாலையில் சுற்றி திரியும் மாடுகளை பட்டியில் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.