கூடுதல் தலைமை செயலர் ஆய்வு
விழுப்புரம் : மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் உள்ள மின் வினியோக உபகரணங்கள் ஸ்டோரில், கூடுதல் தலைமை செயலர் ஆய்வு செய்தார். விழுப்புரம் மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் அலுவலக வளாகத்தில் உள்ள மின் வினியோக உபகரணங்கள் ஸ்டோர் ஆய்வு நடந்தது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். கூடு தல் தலைமை செயலர் ராதா கிருஷ்ணன் ஆய்வு செய்தார். அங்குள்ள மின் வினியோக உபகரணங்கள் ஸ்டோரில் இருப்பு வைக்கப்பட்டுள்ள பொருட்களை ஆய்வு செய்து, வடகிழக்கு பருவமழைக்கு தயார் நிலையில் இருக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அப்போது, பயிற்சி உதவி கலெக்டர் வெங்கடேஷ்வரன், தலைமை பொறியாளர் சதாசிவம், கண்காணிப்பு பொறியாளர் நாகராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.