உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடங்களில் குடமுழுக்கு

ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடங்களில் குடமுழுக்கு

விழுப்புரம்: விழுப்புரம் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில், ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடங்கள் குடமுழுக்கு விழா நாளை நடக்கிறது. இதையொட்டி, விழுப்புரம் நாராயணா நகர் சக்தி பீடத்தில் காலை 9:00 மணிக்கு மேல் 9:30 மணிக்குள்ளும், கிழக்கு பாண்டி ரோடு சக்தி பீடத்தில் காலை 10:00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள்ளும் குடமுழுக்கு நடக்கிறது. மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க பெருந்தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் மற்றும் துணைத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் புனித நீர் ஊற்றுகின்றனர். ஏற்பாடுகளை மாவட்ட தலைவர் மூர்த்தி, பொருளாளர் மணிவாசகர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை