மேலும் செய்திகள்
முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் விழா
16-Sep-2024
விழுப்புரம் : விழுப்புரத்தில் அ.தி.மு.க., சார்பில் அண்ணாதுரை பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடந்தது.நகராட்சி திடலில் நடந்த கூட்டத்திற்கு, தெற்கு நகர செயலாளர் பசுபதி தலைமை தாங்கினார். வடக்கு நகர செயலாளர் ராமதாஸ் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் முருகன், சுரேஷ்பாபு, ராமதாஸ், கண்ணன், ராஜா, நகர செயலாளர் முருகவேல் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் சண்முகம் சிறப்புரையாற்றினர்.மாநில எம்.ஜி.ஆர்.மன்றம் அற்புதவேல், ஆவின் தொழிற்சங்கம் செல்வம், அண்ணா தொழிற் சங்கம் கணேசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஜெகதீஸ்வரி, மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் முத்தையன்.பொதுக்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ஜானகிராமன், முன்னாள் துணைச் சேர்மன் நாராயணன், ஜெ.,பேரவை துணைச் செயலாளர்கள் திருப்பதி பாலாஜி, தங்கசேகர், ரகுநாதன்.வழக்கறிஞரணி ஸ்ரீதர், சகாதேவன், ராதிகா செந்தில், இளைஞரணி குமரன், பாலசுப்ரமணியன், கவுன்சிலர் சேகர் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்.மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல் நன்றி கூறினார்.
16-Sep-2024