மரக்காணத்தில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம்
மரக்காணம்: மரக்காணத்தில் அ.தி.மு.க., சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.பஸ் நிலையம் எதிரே நடந்த கூட்டத்திற்கு, அர்ஜூனன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். ஒன்றிய செயலாளர்கள் ரவிவர்மன், நடராஜ் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் கனகராஜ் வரவேற்றார். தலைமைக் கழக பேச்சாளர்கள் விஜய், ஜெயவேல் பேசினர்.மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், மாநில ஜெ., பேரவை துணைச் செயலாளர் பாலசுந்தரம், மாவட்ட விவசாய அணி செயலாளர் பாண்டுரங்கன், திண்டிவனம் நகர செயலாளர் தீனதயாளன் உட்பட பலர் பங்கேற்றனர்.மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் சிகாமணி நன்றி கூறினார்.