உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / செஞ்சி கோட்டை ஆஞ்சநேயர் கோவிலில் புத்தாண்டு விழா நடத்த ஆலோசனை

செஞ்சி கோட்டை ஆஞ்சநேயர் கோவிலில் புத்தாண்டு விழா நடத்த ஆலோசனை

செஞ்சி: செஞ்சி கோட்டை வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாடுவது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.பீரங்கிமேடு அருணாச்சல ஈஸ்வரர் கோவலில் நடந்த கூட்டத்திற்கு, வழிபாட்டு குழு தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் செல்வம் வரவேற்றார். கவுன்சிலர் சிவக்குமார், விழா குழுவினர் முகிலன், குமரன், தினேஷ், சரவணன், அனுக்குமார், ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், புத்தாண்டு விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும், அரசு துறை மூலம் குடிநீர், சுகாதாரம், துப்புரவு, பாதுகாப்பு, பஸ் வசதி மற்றும் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்ய கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை