உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆரோவில்லில் உள்கட்டமைப்பை மேம்படுத்த ஆலோசனை

ஆரோவில்லில் உள்கட்டமைப்பை மேம்படுத்த ஆலோசனை

வானுார்: ஆரோவில்லில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்து அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. புதுச்சேரி அருகே உள்ள சர்வதேச நகரான ஆரோவில்லில் அரவிந்தரின் 150வது பிறந்த நாள் ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக வரும் டிசம்பர் மாதம் இலக்கிய விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய கல்வி அமைச்சகமும், ஆரோவில் அறக்கட்டளை மற்றும் புதுச்சேரி அரசு இணைந்து நடத்தப்பட உள்ள இந்த விழா குறித்தும், ஆரோவில்லில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு புதுச்சேரி தலைமை செயலாளர் சரத் சந்திர சவுகான், ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் ஜெயந்தி ரவி தலைமை தாங்கினர். புதுச்சேரி செய்தி மற்றும் விளம்பரத்துறை செயலாளர் முகமது ஹசைன் ஆபித், பொதுப்பணித்துறை செயலாளர் முத்தம்மா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். ஆரோவில் சுற்றுப்புற இணைப்பை மேம்படுத்தும் விதமாக புதிய வெளிப்புற வளைவு சாலை அமைக்கும் திட்டம் குறித்தும், 60க்கும் மேற்பட்ட பழமையான மரங்களை பாதுகாப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. புதுச்சேரி அரசின் ஒருங்கிணைப்பாளர் ஆதர்ஷ், ஆரோவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர் அந்தீம், ஆரோவில் நகர வளர்ச்சி குழு உறுப்பினர் சிந்துஜா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ