உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விவசாயிகளுக்கு வேளாண் பயிற்சி

விவசாயிகளுக்கு வேளாண் பயிற்சி

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி வட்டார விவசாயிகளுக்கு பாரம்பரிய வேளாண் பயிற்சி நடந்தது.ஆவுடையார்பட்டு கிராமத்தில் நடந்த பயிற்சிக்கு, வேளாண் உதவி இயக்குனர் கங்கா கவுரி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். உதவி இயக்குனர் சான்று வழங்கல் பாலசுப்ரமணியன் பாரம்பரிய முறையில் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சான்று வழங்கி அங்கக சான்று பெறும் வழிமுறைகள் குறித்து பேசினார்.இயற்கை இடுபொருள் உற்பத்தி மைய தலைவர் ஏழுமலை, உதவி வேளாண் அலுவலர் ஆனந்தி, ஒருங்கிணைப்பாளர் அபிராமி, ஆத்மா திட்ட அலுவலர்கள் மற்றும் முன்னோடி விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !