மேலும் செய்திகள்
அ.தி.மு.க., பூத் நிர்வாகிகளுக்கு பயிற்சி முகாம்
12-Oct-2025
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., மாணவரணி சார்பில், கட்சியின் 54வது ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட மருத்துவரணி செயலாளர் முத்தையன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செங்குட்டுவன், ஒன்றிய செயலாளர்கள் சுரேஷ்பாபு, ராமதாஸ், ராஜா, தெற்கு நகர செயலாளர் பசுபதி, பொதுக்குழு உறுப்பினர் பன்னீர் முன்னிலை வகித்தனர். வடக்கு நகர செயலாளர் ராமதாஸ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் சண்முகம் எம்.பி., கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், விழுப்புரம் தொகுதி வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கவுன்சிலர் ராதிகா, நகர் மன்ற கவுன்சிலர்கள் கலை, கோதண்டம், முன்னாள் கவுன்சிலர் வரதன், அன்பு, குமரன், சுபாஷ், பால்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
12-Oct-2025