உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அ.தி.மு.க., தொடர்ந்து ஐந்து தேர்தலில் ெவற்றி

அ.தி.மு.க., தொடர்ந்து ஐந்து தேர்தலில் ெவற்றி

வா னுார் தொகுதியை அ.தி.மு.க.,விடமிருந்து மீட்பதற்கு ஆளுங்கட்சி நேரடியாக களமிறங்கிட ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானுார் சட்டசபை தொகுதியில் கடந்த 5 தேர்தலில் அ.தி.மு.க., ெதாடர்ந்து ெவற்றி பெற்றுள்ளது. இத்தொகுதியில் 1962 மற்றும் 1967ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க.,வில் பாலகிருஷ்ணன் ெவற்றி ெபற்றார். இதையடுத்து 1971ல் முத்துவேல், 1977ல் பரமசிவன், மீண்டும் 1980ம் ஆண்டு முத்துவேல் வெற்றி பெற்றனர். கடந்த 1984ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க., ராமஜெயம், 1989ம் ஆண்டு தி.மு.க., மாரிமுத்து, 1991ம் ஆண்டு அ.தி.மு.க., ஆறுமுகமும், மீண்டும் 1996ம் ஆண்டு தி.மு.க., மாரிமுத்துவும் வெற்றி பெற்றனர். இந்நிலையில், 2001, 2006 தேர்தல்களில் கணபதி, 2011 தேர்தலில் ஜானகிராமன், 2016 மற்றும் 2021 தேர்தல்களில் சக்கரபாணி என அ.தி.மு.க., வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அ.தி.மு.க.,விடமிருந்து வானுார் தொகுதியை மீட்பதற்கு நேரடியாக களமிறங்க ஆளுங்கட்சி திட்டமிட்டுள்ளது. திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு மக்கள் நலக் கூட்டணி மற்றும் 2021ம் ஆண்டு தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட வி.சி., கட்சி வெற்றி வாய்ப்பை இழந்தது. இதையடுத்து கடந்த எம்.பி., தேர்தலில் வி.சி., வேட்பாளரை ஆதரித்து, ஆளுங்கட்சியினர் கடுமையாக பணியாற்றி, அ.தி.மு.க., கூட்டணியை விட கூடுதல் ஓட்டுகள் பெற்றனர். இதனால், வரும் தேர்தலில் வானுாரில் போட்டியிட தி.மு.க.,வினர் உற்சாகத்துடன் ஆயத்தப் பணிகளை துவக்கிவிட்டனர். கடந்த 2011ம் ஆண்டு இதே தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், களம் காணத் தயாராகி வருகிறார். தலைமை பச்சை கொடி காட்டினால் பணியை துவங்க தயாராக உள்ளார். கடந்த 2016ம் ஆண்டில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த முன்னாள் மாவட்ட துணை சேர்மன் மைதிலி ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் கவுதம் உள்ளிட்டோரும் 'சீட்' ெபற முயற்சித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை