உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாற்று கட்சியினர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

மாற்று கட்சியினர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

திண்டிவனம்: ஒலக்கூர் மேற்கு ஒன்றியம், வைரபுரம் கிராமத்தைச் சேர்ந்த அ.ம.மு.க., - பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அ.தி.மு.க.,வில் இணைந்தனர். திண்டிவனம், அ.ம.மு.க., நிர்வாகிகள் ராமச்சந்திரன், ராஜ், பா.ம.க., வீரசாமி, எழிலப்பன் உட்பட 100 பேர் அ.தி.மு.க.வில் மாவட்ட செயலாளர் சண்முகம் முன்னிலையில் இணைந்தனர். ஒலக்கூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட இணைச் செயலாளர் ஆனந்தி, மகளிர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வி, ஒன்றிய நிர்வாகிகள் செல்லப்பன், சீரஞ்சீவி, முருகானந்தம், ராஜசேகர், ஜெகதீசன், பெருமாள், குபேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி