உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் நன்கொடை

அரசு பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் நன்கொடை

விழுப்புரம்: விக்கிரவாண்டி அடுத்த சித்தலம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு முன்னாள் மாணவர்களான உண்மை தோழர்கள் நலச்சங்க நிர்வாகிகள், ஸ்டெபிலைசரை நன்கொடையாக வழங்கினர்.விக்கிரவாண்டி அருகே சித்தலம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் கணினி பயிற்சி கூடம் உள்ளது. இந்த பயிற்சி கூடத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஸ்டெபிலைசரை கடந்த 1996-98 ம் ஆண்டில் பயின்ற முன்னாள் மாணவர்களான உண்மை தோழர்கள் நலச்சங்க நிர்வாகிகள் நன்கொடையாக வழங்கினர்.உதவி செய்த முன்னாள் மாணவர்களுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ