உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

 அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்: அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி, தேசிய தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பஞ்சமி தரிசு நிலங்களை மீட்டு தலித் மக்களிடம் ஒப்படைக்க கோரி, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் சிவபதி தலைமை தாங்கினார். தலைவர் கண்ணாயிரம் முன்னிலை வகித்தார். மாநில தலைமை நிலைய செயலாளர் ராகுல் வரவேற்றார். தமிழ் மாநில தலைவர் ஸ்ரீரங்கன்பிரகாஷ் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் பட்டியல் சமூக மக்களுக்கு சொந்தமான பஞ்சமி தரிசு நிலங்கள், பூமிதான நிலங்களை மீட்டு தமிழக அரசு பட்டியல் சமூக மக்களிடம் வழங்க வேண்டும். பொங்கல் பண்டிகையை யொட்டி, ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரர்களுக்கு 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஒன்றிய தலைவர் சுதன்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ