உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / டீசல் கேனுடன் வந்த முதிய தம்பதி

டீசல் கேனுடன் வந்த முதிய தம்பதி

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்டத்திற்கு, டீசல் கேனுடன் வந்த வயதான தம்பதியால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த வயதான தம்பதியை போலீசார் சோதனை செய்ததில் பையில் ஒரு லிட்டர் டீசல் இருந்தது தெரியவந்தது. அதனைக் கைப்பற்றி நடத்திய விசாரணையில், புதுஉச்சிமேடு ராமசாமி, 75; அவரது மனைவி சிவகொழுந்து, 65; என்பதும், இவர்கள் 4 ஆண்டுகளுக்கு முன் தனது மகன் சந்திரசேகரனுக்கு 2 ஏக்கர் நிலம் மற்றும் மாடி வீட்டை தானசெட்டில்மென்ட் எழுதிக் கொடுத்துள்ளனர். சொத்து வந்ததும் பெற்றோரை கவனிக்கவில்லை. இதனால் தானசெட்டில்மென்ட் பத்திரத்தை ரத்து செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தும், நடவடிக்கை இல்லை. இதனால், விரக்தியடைந்த தம்பதி குறைகேட்பு கூட்டத்தில் டீசலை ஊற்றி தற்கொலைக்கு செய்து கொள்ள டீசலுடன் வந்தது தெரியவந்தது. விசாரணைக்குப்பின், நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறி அனுப்பி வைத்தனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ