உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் தொடர் போராட்டங்கள் அறிவிப்பு

அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் தொடர் போராட்டங்கள் அறிவிப்பு

விழுப்புரம்: விழுப்புரத்தில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் நாராயணன் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் கட்டபொம்மன் வேலை அறிக்கை வாசித்தார். பொதுச்செயலாளர் மாயமலை எதிர்கால நடவடிக்கை குறித்து பேசினார். இதில், 30 மாவட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், தி.மு.க., தேர்தல் வாக்குறுதிபடி, ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு சிறப்பு பென்ஷன் 6,750 ரூபாய் வழங்க வேண்டும்; மருத்துவபடி 300 ரூபாய் வழங்க வேண்டும்; ஈமச்சடங்கு நிதி 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்; என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சங்கம் சார்பில் மாநிலம் தழுவி அக்டோபர் 14ம் தேதி கலெக்டர்களிடம் பெருந்திரள் முறையீடு செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், வரும் நவம்பர் 1ம் தேதி முதல் 20ம் தேதி வரை கருப்பு மையிட்ட ஒரு லட்சம் அஞ்சலட்டை முதல்வருக்கு அனுப்புவது; ஜனவரி 2ம் தேதி மாவட்ட தலை நகரங்களில் கருப்பு பேட்ச் அணிந்து மவுன ஊர்வலம் நடத்துவது; பிப்ரவரி 3ம் தேதி சென்னையில் முதல்வரை சந்தித்து பெருந்திரள் முறையீடு செய்வது; எனவும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !