உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆஞ்சநேய சுவாமி கோவில் தெப்பல் உற்சவம்

ஆஞ்சநேய சுவாமி கோவில் தெப்பல் உற்சவம்

விழுப்புரம்: விழுப்புரம் திரு.வி.க., வீதியில் உள்ள ஆஞ்சநேய சுவாமி கோவிலில் தெப்பல் உற்சவம் நடந்தது.கோவிலில் கடந்த 10ம் தேதி லட்சதீப விழா சிறப்பு அபிஷேகம், திருமஞ்சனத்தோடு துவங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமி ஸ்ரீ ராமர், சீதா, லட்சுமணரோடு ஆஞ்சநேய சுவாமி வீதியுலா, சந்திரபிரபை வாகன வீதியுலா, நாகவாகனம், கருடசேவை, இந்திர விமானம், குதிரை வாகனம், புஷ்ப பல்லக்குகளில் வீதியுலா நடந்தது.தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு ஸ்ரீ ராமர், சீதாதேவி, லட்சுமணன் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி பட்டாபிஷேக அலங்காரத்தில் ஆஞ்சநேய புஷ்கரணி குளத்தில் தெப்பல் ஓடத்தில் தெப்போற்சவம் நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை