உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அண்ணாதுரை பிறந்த நாள் விழா

அண்ணாதுரை பிறந்த நாள் விழா

கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரத்தில் முகையூர் ஒன்றிய தி.மு.க சார்பில் அண்ணாதுரை பிறந்த நாள் விழா நடந்தது. பஸ் நிலையத்தில், நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் அண்ணாதுரை படத்திற்கு நிர்வாகிகள் மலர் துாவி மரியாதை செய்தனர். தொடர்ந்து தமிழ் மொழி, பண்பாடு காப்பதற்கும், லோக்சபா தொகுதி வரையறையை எதிர்த்தும் உறுதிமொழியேற்றனர். நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர் தேவசேனாதிபதி, ஒன்றிய கவுன்சிலர் மீனாகுமாரி ஏழுமலை, நிர்வாகிகள் ரவிக்குமார், ஜீவானந்தம், ஏழுமலை, அருணகிரி, நடராஜன், செல்லபெருமாள், விநாயகம் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி