உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அன்னியூர் அரசு கல்லுாரி முதல்வர் துவக்கி வைப்பு

அன்னியூர் அரசு கல்லுாரி முதல்வர் துவக்கி வைப்பு

விழுப்புரம் : விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி அன்னியூரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியை, சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.அன்னியூரில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் பொன்முடி, ரவிக்குமார் எம்.பி., மற்றும் அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தனர்.கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் பேசுகையில், இக்கல்லுாரியில் 2025-26ம் கல்வியாண்டில் பி.காம்., பி.பி.ஏ., பி.ஏ., அரசியல் அறிவியல், பி.எஸ்.சி., வேதியியல் மற்றும் கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடக்கும். மாவட்டத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், இந்தாண்டு 5,588 மாணவர்களுக்கான சேர்க்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அன்னியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மட்டும் 280 இடங்களுக்கு, மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது என கூறினார். நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பத்மஜா, முன்னாள் எம்.பி., கவுதம சிகாமணி, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் கல்பட்டு ராஜா, முருகன், ஒன்றிய சேர்மன்கள் கலைச்செல்வி, சங்கீதா அரசி, துணை சேர்மன் வீரராகவன், மாவட்ட கவுன்சிலர்கள் முருகன், சிவக்குமார், சி.இ.ஓ., அறிவழகன், தாசில்தார் செல்வமூர்த்தி, கல்லுாரி முதல்வர் அசோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி