உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பட்டாசு விற்பனைக்கு உரிமம் விண்ணப்பங்கள் வரவேற்பு

பட்டாசு விற்பனைக்கு உரிமம் விண்ணப்பங்கள் வரவேற்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், தீபாவளி பட்டாசு விற்பனை செய்வதற்கு, தற்காலிக விற்பனை உரிமம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டத்தில், வரும் தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு விற்பனை செய்வதற்கு, தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் பெற விருப்பமுள்ளவர்கள், அரசு பொது இ-சேவை மையத்தில் உரிய ஆவணங்களுடன், இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.தமிழக அரசு உத்தரவின்படி தற்காலிக பட்டாசு உரிமத்திற்கு, அரசு பொது இ-சேவை மையங்களில் ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை செய்யப்படும். நேரடியான விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது.தற்காலிக வெடிபொருள் உரிமமானது, உரிமம் வழங்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்கள் மட்டுமே செல்லத்தக்கதாகும். மேலும், விழுப்புரம் மாவட்டத்தில், இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு உரிமம் கோரி விண்ணப்பிப்பவர்கள், அனைத்து சான்றிதழ்களையும் இ-சேவை மையத்தில் பதிவேற்றம் செய்திடவும், நாளை 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை