மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி நியமன ஆணை
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஒன்றியத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான பதவி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஒன்றிய அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை தலைமை தாங்கி 51 மாற்றுத் திறனாளிகளுக்கு ஊராட்சி உறுப்பினர்கள், 1 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான ஆணையை வழங்கினார். மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், பி.டி.ஓ.,க்கள் சையது முகமது, நாராயணன், மேலாளர் கலைவாணி, மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், ஆத்மா குழு தலைவர் வேம்பி ரவி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் ரவிதுரை, ஜெயபால், கில்பர்ட்ராஜ், ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.