தினமலரின் சிறந்த சேவைக்கு பாராட்டு
விழுப்புரம்: சிறந்த சேவையாற்றி வரும் தினமலர் நாளிதழுக்கு பாராட்டுகள் என, விழுப்புரம் மாவட்ட குறு மற்றும் சிறு தொழில் சங்க தலைவர் அம்மன் கருணாநிதி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: தினமலர் தேசிய தமிழ் நாளிதழ், தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களின் அன்றாட பிரச்னைகளை, தேவைகளை, சிறிதும் தயக்கமின்றி சுட்டிக்காட்டி, அரசு மூலம் அதனை பூர்த்தி செய்து, மாநில மக்களின் மேம்பாட்டிற்கும், வளர்ச்சிக்கும் சிறந்த சேவையாற்றி வருகிறது. குறு, சிறு தொழில்கள் வளர்ச்சியே நாட்டின் முன்னேற்றம் என்பதற்கு உறுதுணையாக பல்வேறு தகவல்களையும், செய்திகளையும் அரசு மற்றும் தொழில் நிறுவனங்களுக்கும் வழங்கி, தினமலர் முக்கிய பங்காற்றி வருகிறது. இதழியல் துறையில் 75வது ஆண்டு பவள விழா கொண்டாட்டத்தில் உள்ள தினமலர் தமிழ் நாளிதழ், மென்மேலும் வளர்ந்து, தங்கள் சேவைப் பணியை தொடர வேண்டும் என்று, குறு மற்றும் சிறு தொழில் சங்கம் சார்பில் வாழத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.