மாணவர்களுக்கு பாராட்டு
வானுார் : மயிலம் பொறியியல் கல்லுாரியில், 'கான்கர் 25' என்ற தலைப்பில் கல்லுாரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடந்தது. பல கல்லுாரியை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.இப்போட்டிகளில் வானுார் அரசு கல்லுாரி இரண்டாம் ஆண்டு மாணவி பிரியதர்ஷினி சமையல் போட்டியிலும், மாணவர் ஹரிஹரன் வினாடி வினா போட்டியிலும், மாணவி ஜெயப்பிரியா ரங்கோலி போட்டியிலும் பரிசு பெற்றனர். பரிசு பெற்ற மாணவர்களை கல்லுாரி முதல்வர் வில்லியம் பாராட்டினார்.