சிகா கல்லுாரியில் தொல்லியல் கண்காட்சி
விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த கப்பியாம்புலியூர் சிகா மேலாண்மை மற்றும் கணினி அறிவியல் கல்லுாரியில் தொல்லியல் கண்காட்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் ராஜரத்தினம் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். துணை முதல்வர் புவனேஸ்வரி முன்னிலை வகித்தார். வரலாற்று ஆய்வு மையம் மூலம் நடந்த இக்கண்காட்சியில் விழுப்புரம் அண்ணா அரசு கல்லுாரி பேராசிரியர் ரமேஷ் வழிகாட்டுதல்பேரில், ஆய்வாளர் இமானுவேல், கோபிநாத், ஜோதிபிரகாஷ் மற்றும் மாணவர்கள் சரவணன், ராகுல் ஆகியோர் விழுப்புரம் தென்பெண்ணை ஆற்றில் கண்டெடுத்த தொல்லியல் பொருட்கள், நாணயங்கள், சுடுமண் பொம்மைகள், கற்கால ஆயுதங்கள், பாறை ஓவியங்கள், தமிழ் பிராமி கல்வெட்டுகள் ஆகியவற்றை வைத்திருந்தனர். ஏற்பாடுகளை துறை தலைவர் லோகு செய்திருந்தார். வரலாற்று துறை தலைவர் தாண்டவமூர்த்தி நன்றி கூறினார்.