உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஏட்டுவிடம் தகராறு: வீடியோ வைரல்

ஏட்டுவிடம் தகராறு: வீடியோ வைரல்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே போலீஸ் ஏட்டுவின் சட்டையை பிடித்து வாலிபர் தகராறில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. விழுப்புரம் அடுத்த காணை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிபவர் ராஜேந்திரன். இவர், நேற்று முன்தினம் மப்டியில், காணை பஸ் நிறுத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அங்கு கூட்டமாக நின்றிருந்த வாலிபர்களை கலைந்து செல்லுமாறு கூறியபோது, வாலிபர் ஒருவர், ஏட்டு ராஜேந்திரன் சட்டையை பிடித்து நெட்டி தள்ளி தகராறில் ஈடுபட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று வைரலானது. இதையடுத்து, காணை போலீசார் அந்த வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது, ராஜேந்திரன் போலீஸ் என தெரியாமல் தகராறில் ஈடுபட்டதாக கூறி மன்னிப்பு கேட்டனர். அதையடுத்து, போலீசார் வாலிபர்களை எச்சரித்து அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி