உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு பள்ளிக்கு அரிமா சங்கம் குடிநீர் இயந்திரம் வழங்கல்

அரசு பள்ளிக்கு அரிமா சங்கம் குடிநீர் இயந்திரம் வழங்கல்

செஞ்சி, ; கோவில்புறையூர் அரசு நடுநிலைப் பள்ளிக்கு அரிமா சங்கம் சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். ஊராட்சித் தலைவர் ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர் செண்பகம் கண்ணன், வார்டு உறுப்பினர், பச்சையம்மாள் மேலாண்மை குழு தலைவர் புவனேஸ்வரி முன்னிலை வகித்தனர். அரிமா சங்க மாவட்ட தலைவர் முருகன், செஞ்சி கிளை தலைவர் பரிமளகந்தி ஆகியோர் புதிய குடிநீர் இயந்திரத்தை இயக்கி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் அண்ணாதுரை பன்னீர் மாலா உமா மகேஸ்வரி அரிமா சங்க நிர்வாகிகள் நவநீதகிருஷ்ணன், ஆறுமுகம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ