தடகள போட்டிகள்: விழுப்புரம் மாவட்ட மாணவர்கள் சாதனை
விழுப்புரம்: தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், இந்தாண்டிற்கான முதல் தடகள விளையாட்டு போட்டிகள், கடந்த 7ம் தேதி துவங்கி இரண்டு நாட்கள், கோயம்புத்துார் நேரு விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இதில், விழுப்புரம் தடகள சங்கம் சார்பில் பங்கேற்ற மாணவர் ஹேமபிரசாத், 16 வயதுக்குட்பட்ட பிரிவில், 60 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் கலந்துகொண்டு முதலிடமும், 300 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 2ம் இடமும் பிடித்து சாதனை படைத்தார்.இதேபோல் மாணவி கீர்த்திகா பொதுப்பிரிவில், வட்டு எறிதல் போட்டியில் கலந்துகொண்டு முதலிடம் பிடித்தார். இருவரும் தங்க பதக்கம் வென்று, விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.சாதனை படைத்த இருவருக்கும், தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் லதா சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினார். வெற்றிக்கு உறுதுணையாக இருந்த, விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆழிவாசன், தடகள பயிற்சியாளர் ராஜேஸ்வரி, மாவட்ட தடகள சங்க தலைவர் பொன்னுசாமிகார்த்திக், செயலாளர் மணிவண்ணன் ஆகியோரும் பாராட்டப்பட்டனர்.